Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்திரா காந்திக்கு அவரு தான் ஜாதகம் கணித்தார் – நெகிழ்ந்து போன துரைமுருகன் …!!

சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன், கமலபாதி,  திருப்பாதி என்கிறவர் காங்கிரஸில் ஒரு மூத்த தலைவர். மோதிலால் நேருக்கு நண்பர், ஜவஹர்லால் நேருவை மை டியர் பாய் என்று தான் வீட்டில் அழைப்பார். சுருக்கமாக சொன்னால் அந்தக் குடும்பத்திற்கு அவர் ஒரு குரு. இந்திரா காந்தி அவர்கள் பிறந்தபோது அவருக்கு சின்ன குழந்தையில் இருந்து ஜாதகம் கணித்தவர்.

நேருவை மை டியர் பாய் என்று அழைக்கக் கூடியவர்கள் இந்திய அரசியலில் இரண்டே பேர்தான். ஒன்று திருபாதி இன்னொன்று வங்கத்தின் உடைய முதலமைச்சராக இருந்த வி.சி.ராய். அந்த வி.சி. ராய் எப்படிப்பட்டவர் என்றால் மேற்கு வங்கத்திலிருந்து அஸ்ஸாம் பிரிந்தபோது வங்கத்திற்குரிய எண்ணை கிணறுகள் அஸ்ஸாமிற்கு போகிறது என்று தெரிந்தவுடன், தொலைபேசியில் சொன்னார் மை டியர் பாய். இதுதான் உங்களுடைய முடிவா என்று கேட்டார்….

ஒவ்வொரு மானியத்தியுடைய கெஸ்ட் ஹவுஸ்களும், தூதுவ ஆலயங்களாக மாறும் என்று சொன்னவர் வி.சி. ராய். அதே போன்று ஒரு தைரியசாலி இன்னும் சொல்லப்போனால், குருவாக இருப்பவர் நம்முடைய திருபாதி அவர்கள். அந்த திருப்பாதி அவர்கள் நேரு காலத்திலேயே அமைச்சராக இருந்தார். அதற்கு பிறகு,  அவர் மறைந்த பிறகு இந்திரா காந்தி பிரதமராக வந்த போது, அந்த அமைச்சரவையிலே அவர் சேர்ந்தார்.

பலர் கேட்டார்கள், நீங்கள் அவரிடத்திலே இருந்தீர்கள்…  இப்போது நீங்கள் தூக்கி வளர்த்த குழந்தை பிரதமர் ஆகி இருக்கிறது, அவரிடத்திலே நீங்கள் பணியாற்ற போகிறீர்களா என்று….. அப்போது திருபாதி சொன்னார் நான் அலகாபாத் குடும்பத்தின் உடைய விசுவாசி, எனக்கு தெரிந்ததெல்லாம் நேருவின் முகம் தான், அது இந்திராகாந்தி அங்கு உட்கார்ந்தாலும் சரி அல்லது ராஜீவ்காந்தி உட்கார்ந்தாலும் சரி, சஞ்சய் காந்தி உட்கார்ந்தாலும் சரி அந்த குடும்பத்தின் உடைய பிள்ளைகள் யார் உட்கார்ந்தாலும் எனக்கு நேருவாக தான் தெரிவார்களே தவிர, அவர்களை மித்திர பேதம் பார்ப்பதற்கு என்னால் முடியாது என்று சொன்னார்.

Categories

Tech |