வெயிலின் தாக்கத்தை தீர்க்கும் வகையில் குடிநீர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றுள்ளது
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் குடிநீர் பந்தல் அமைக்க கிரனுர் வியாபாரிகள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதேபோல் நேற்று குடிநீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் வியாபாரிகள் சங்க தலைவர்,வியாபாரிகள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் வியாபாரிகள் சங்கத்தினர் குடிநீர் பந்தலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளனர். இந்த குடிநீர் பந்தலால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களின் தாகம் தீரும் என கூறியுள்ளனர்.