குடும்ப தகராறில் மருமகன் மாமியாரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இதற்கு காளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜெயக்கொடி என்ற மகள் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயகொடிக்கும் முனியாண்டி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜெயகொடிக்கும், முனியாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை காளியம்மாள் தட்டி கேட்டுள்ளார்.
அப்போது கோபமடைந்த முனியாண்டி தனது மாமியாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனால் காளியம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் படுகாயமடைந்த ஜெயாவை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முனியாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.