சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர், அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் பொட்டகொல்லை பகுதியை சேர்ந்த அன்புமணி என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அன்புமணியை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 280 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.