மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இன்ஜினியரிங் மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சதீஷ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் ஆண்டிமடம்- ஸ்ரீமுஷ்ணம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சதீஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.