கோவிலில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர் ஐம்பொன் சிலைகள் இருக்கும் அறையின் பூட்டை இரும்பு கம்பியால் உடைக்க முயற்சித்தார். அப்போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் அந்த மர்மநபர் அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து அலாரம் சத்தம் கேட்டு கோவிலுக்கு அருகில் இருந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மரம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.