இயக்குனர் ராம் கோபால் வர்மா, தென்னிந்திய சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் பற்றி கூறியுள்ளார்.
இந்திய சினிமா உலகின் பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மா தன்னுடைய படங்களிலும் கருத்துக்களிலும் சர்ச்சைகளில் சிக்கிவிடுவார். இந்நிலையில் தற்போது அவர் இயக்கத்தில் ரிலீசாகி உள்ள “காதல் காதல் தான்” என்ற படம் உறவைப் பற்றிக் கூறுவது ஆபாசமாக இருப்பதாக இதை தடை செய்ய கோரி பலர் கூறி வருகின்றனர். பிரச்சனையில் சிக்கியுள்ள இந்த படம் பற்றி ராம்கோபால் வர்மா கூறியுள்ளதாவது, “ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ளது மட்டும் காதல் அல்ல. பெண்ணுக்கும் பெண்ணுக்கும் மேலும் ஆணுக்கும் ஆணுக்கும் ஏற்படுவதும் காதல்தான்.
எனவே இந்த காதல்களும் மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டதுதான் இந்த படம் எனவும் ஹீரோயின்களாக நடித்திருக்கும் அப்ஸரா மற்றும் நைனா உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்” என கூறியுள்ளார். மேலும் தமிழில் இவருக்கு பிடித்த ஹீரோ பற்றி பேசிய பொழுது, “தென்னிந்திய சினிமாவில் எனக்கு சூர்யா-வை மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். முன்னதாக 2010ஆம் வருடம் சூர்யா நடிப்பில் ரத்தசரித்திரம் திரைப்படத்தை இயக்கிய ராம் கோபால் வர்மா படப்பிடிப்பின்போது சூர்யாவின் நடிப்பை பார்த்தும் அவரின் குணத்தை பார்த்தும் சூர்யாவை பிடித்து விட்டதாக கூறியுள்ளார்.