Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 28-ல் நேர்முகத்தேர்வு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திட்ட உதவியாளர், கட்டிடகலை உதவியாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு எழுத்துத்தேர்வு ஏற்கனவே முடிந்த நிலையில், எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு நேர்முக தேர்வு வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்த விவரங்களை தேர்வர்கள் அறிய www.tnpsc.gov.inஎன்ற டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தை அணுகவும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |