பெரு நாட்டில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதால் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் . எனவே எரிபொருள் மற்றும் சுங்க கட்டண விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது கிளர்ச்சியாளர்கள் ஊடுருவி அசம்பாவிதத்தை ஏற்படுத்தியதாக அந்நாட்டு அதிபர் அனிபல் டாரஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து பிரதமருக்கு ஆதரவாக பொது தொழிலாளர்கள் கூட்டமைப்பு மற்றும் கல்வி தொழிலாளர்கள் சங்கத்தினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் பொதுச் சீர்திருத்தம் விவசாயம் சுகாதாரம் மற்றும் கல்வி போன்றவை முன்னேற்ற வேண்டும் என அவர்கள் கூறினர். ஆனால் காங்கிரஸ் அதிபரை ஆட்சி அமைக்க விடக்கூடாது என கூறிய அவர்கள் காங்கிரசை முடக்கவேண்டும் எனவும் கூச்சலிட்டனர்.