ரஜினிகாந்தை கண்டு அதிமுக பயப்படவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் “அண்ணா, பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய நான்கு தலைவர்களுக்கும் எந்த இழுக்கு ஏற்பட்டாலும் அதனை கண்டித்து அதிமுக குரல் கொடுக்கும்” என தெரிவித்தார்.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற சமயம் பார்த்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் பாஸ்கரன் கூறியிருப்பது அவரது சொந்த கருத்தாக இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம் எனவும் அதிமுக யாருக்கும் அஞ்சாது எனவும் ஜெயக்குமார் கூறினார்.