Categories
அரசியல்

ISE மற்றும் ICSE தேர்வுகள்…. எப்படி அதிக மதிப்பெண் எடுக்கலாம்?…. இதோ சூப்பர் டிப்ஸ்….!!!!

இந்த வருடத்திற்கான ISE மற்றும் ICSE‌ தேர்வுகள் ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு மாணவர்கள் சரியான ஆய்வுத் திட்டம் அல்லது உத்தியைப் பயன்படுத்த வேண்டும். இந்தத் தேர்வு எழுதுபவர்கள் கடின உழைப்புடன் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்த வேண்டும். அதாவது மாணவர்கள் முதலில் பாடத்திட்டங்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பாடத்திட்டத்தை ஆய்வு செய்யும்போது எந்த தலைப்புகளில் வலுவாக உள்ளீர்கள், எந்தப் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.

இது தேர்வு எழுதுவதற்கு முக்கியமான ஒரு வழிமுறையாக கருதப்படுகிறது. மாணவர்கள் தேர்வு நெருங்கும் நேரத்தில் குறைந்தது 4 மணி நேரமாவது படிக்க வேண்டும். இதற்கு மேல் அதிக நேரம்  எடுத்து படித்தால் தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். அதன்பிறகு மாதிரி வினாத்தாள்களை மாணவர்கள் தீர்க்க வேண்டும். இது தேர்வுக்கு தயாராவதற்காண ஒரு சிறந்த வழிமுறையாக கருதப்படுகிறது. மேலும் படிக்கும் போது கட்டாயமாக குறிப்புகள் எடுக்க வேண்டும். குறிப்புகள் எடுக்காமல் படிக்கும் பாடங்கள் கட்டாயமாக பயனளிக்காது. எனவே  அனைத்து மாணவர்களும் படிக்கும் போது குறிப்புகள் எடுக்க வேண்டும்‌. இந்த குறிப்புகள் தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.

Categories

Tech |