பூமியை கண்காணிப்பதற்காக “காவோபென்-303” எனும் செயற்கைக் கோளை சீனநாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினீயர்களும் தயாரித்தனர். இந்த செயற்கைக்கோள் லாங் மார்ச் -4சி ராக்கெட் வாயிலாக ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகனை மையத்திலிருந்து நேற்று காலை 7.47 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் திட்டமிட்டவாறு சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த கண்காணிப்பு செயற்கைக்கோளானது நம்பகமானதும் நிலையானதுமான உயர்தெளிவுத்திறன் கொண்டது ஆகும். மேலும் ரேடார் படங்களை பெறவும் நிலப்பரப்பு, சுற்றுச்சூழல், வள கண்காணிப்பு மற்றும் அவசர காலபேரிடர் தடுப்பு மற்றும் தணிப்பு போன்றவற்றுக்கான செயல்பாடு பயன்பாட்டு தரவுகளை தர பயன்படுத்தப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.