தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்று அதிலிருந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் 4 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை உள்துறை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ளார். அதாவது சென்னை ஆளுநர் மாளிகையில் உதவி எஸ்.பியாக விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பணியாற்றி வந்தார். இவரக்கு எஸ்.பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு மீண்டும் அதே பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவி ஐ.ஜியாக ராமகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்தார். இவரை சென்னை காவலர் நலன் உதவி ஐ.ஜியாக பணி மாற்றம் செய்துள்ளனர். அதன்பிறகு காத்திருப்போர் பட்டியலில் எஸ்.பி மகேஷ்குமார் இருந்தார். இவரை சென்னை உயர் நீதிமன்ற வழக்கு கண்காணிப்பு பிரிவு உதவி ஐ.ஜியாக மாற்றியுள்ளனர். மேலும் சென்னை ரயில்வே டி.ஐ.ஜியாக அபிஷேக் தீட்சித் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.