Categories
அரசியல் மாநில செய்திகள்

#பெரியாரவது_மயிராவது…. ”இரண்டாம் நாள் யுத்தம்” ரஜினி VS பெரியார் ….!!

பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று ரஜினி கூறியதற்கு ஆதரவாக மீண்டும் #பெரியாரவது_மயிராவது என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது.

சமீபத்தில் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து நேற்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து ரஜினி விளக்கமளித்தார் .

அதில் தாம் ஊடகங்களில் வந்ததையே கூறியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் இல்லாத விஷயம் ஒன்றும் நான் சொல்ல, கற்பனையாக ஒன்னும் சொல்லல , மத்தவங்க சொன்னதுதான் நான் சொல்லி இருக்கேன். இதுக்கு நான் மன்னிப்பு கேட்கணும் ,  வருத்தம் தெரிவிக்கனும் என்று சொல்றாங்க. சாரி நான் மன்னிப்பு கேட்க முடியாது , வருத்தம் தெரிவிக்க முடியாது என்று ரஜினி ஆதாரத்துடன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நடிகர் ரஜினியின் இந்த கருத்துக்கு நேற்றே ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தது. ரஜினியின் இந்த கருத்துக்கு ஆதரவாக நேற்று அவரின் ரசிகர்கள் #மன்னிப்பு_கேட்க_முடியாது , #ரஜினிகாந்த்  , #Rajinikanth , #மன்னிப்பாவது_மயிராவது  , #இந்து_விரோதி_திமுக , என்ற ஹாஷ்டகை ட்ரென்ட் செய்தனர்.  #மன்னிப்பு கேட்க முடியாது  என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் முதலிடம் வகித்தது.

இது ஒருபுறமிருக்க  இவரின் இந்த கருத்துக்கு எதிராக #சூப்பர்சங்கிரஜினி , #மெண்டல் ரஜினி என்ற ஹாஷ்டக்கும் நேற்று ட்ரெண்டாகியது. இந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் ரஜினிக்கு ஆதரவாக , எதிராக என ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. காலை முதல் #ரஜினியாவது_மயிராவது என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் ஆகி வந்த நிலையில் ஆத்திரமடைந்த ரஜினி ஆதரவாளர்கள் #பெரியாரவது_மயிராவது  என்ற ஹாஷ்டகை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

நேற்றும் ரஜினிக்கு ஆதரவாகவும் , எதிராகவும் ஹாஷ்டாக் ட்ரெண்டாகிய நிலையில் இன்றும் அதே போல ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. அதில் #ரஜினியாவது_மயிராவது என்ற ஹாஷ்டாக் இந்தியளவிலும் , #பெரியாரவது_மயிராவது  சென்னை அளவிலும் ட்ரெண்டாகி வருகின்றது. அதோடு ரஜினிக்கு ஆதரவாக #IStandWithRAJINIKANTH  என்ற ஹாஷ்டக்கும் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |