Categories
கல்வி

ஆப்லைன் செமஸ்டர் தேர்வுகள்…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு…!!

டெல்லி பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகள் 2022:

டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான ஆஃப்லைன் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விதிகள், தேர்வு முறை போன்றவற்றை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆஃப்லைனில் செமஸ்டர் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். இதனை அடுத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி துறையினர் கூடுதலான கேள்விகளை சேர்க்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனாலும் ஆஃப்லைன் தேர்வு செயல்முறைக்கு மாற்றியமைக்க வேண்டி இருப்பதால் தற்போது இருக்கும் கேள்விகள் முன்னேற்பாடாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கான விதிமுறையையும் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதாவது நியாயமான காரணத்தினால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். எனவே பல்கலைக்கழகம் சார்பில் இரண்டாம் கட்ட தேர்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து மாதிரி தேர்வுகளை மாணவர்களுக்கு நடத்துமாறு பல்கலைக்கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து மாணவர்கள் முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.

Categories

Tech |