Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்”…. உற்சாகத்தில் சிஎஸ்கே வீரர்கள்…. என்ன காரணம் தெரியுமா?!!!!

ஐபிஎல் 15வது சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை. மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே தொடர்ந்து தோல்வியை சந்தித்து 8வது இடத்தில் நீடித்து வருகிறது. ஆனால் அடுத்த போட்டியிலும் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தால் பிளே ஆஃப் வாய்ப்பை கடுமையாக பாதிக்கும். எனவே ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையிலான மோதலில் சிஎஸ்கே வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் தொடர் தோல்விகள் குறித்து விவாதித்துள்ளனர். அப்போது அனைத்து வீரர்களும் தங்களுடைய பிரச்சனைகளை வெளிப்படையாக கூறியுள்ளனர். அதிலும் குறிப்பாக முகேஷ் சௌத்ரி, “பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பந்துகளை சரியான லைனில் வீச முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட், “மூன்று போட்டிகளில் ரன்கள் எடுக்காததால் மன உளைச்சல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார். இதையடுத்து தோனி, அனைத்து பிரச்சனைகளையும் கேட்டறிந்து பயிற்சித் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் மன உளைச்சல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளதால், முதலில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பயிற்சி களத்தில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் பிரச்சனையை கண்டறிந்து உடனுக்குடன் தீர்வு காணப்படுவதால் தற்போதைய சிஎஸ்கேவினர் பயிற்சியில் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |