‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிதாக பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளார் என தெரிகிறது.
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ”பாரதிகண்ணம்மா” சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று . தற்போது இந்த சீரியலின் கதைகளம் என்னவென்றால், சமையல் அம்மா மற்றும் டாக்டர் அப்பாவை இணைக்கும் முயற்சியில் உள்ளனர்.
இதனையடுத்து இந்த சீரியலில் புதிதாக பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளார் என தெரிகிறது. அதன்படி, பிரபல நடிகை ரேகா தான் இந்த சீரியலில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.