மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்தது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை பயிற்சி பெற வேண்டி இருக்கிறது. அதோடு நீட் தேர்வில் வெற்றி வெற்றி பெறுவதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு மட்டும் மூன்று லட்சம் வரை செலவாகிறது.
எனவே இது கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கியது. அதே நேரத்தில் நீட் தேர்வு நடைமுறையில் இல்லாத காலகட்டத்திலும் கூட மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது. இதற்கு அரசு பள்ளிகளின் கட்டமைப்பு கல்வியின் தரம் குறைவு போன்றவையும் காரணமாக இருக்கலாம். தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு அரசு பள்ளிகளுக்கும் கிடைக்கும் வரை இத்தகைய இட ஒதுக்கீடு கட்டாயம் தேவைதான் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.