Categories
அரசியல்

“சொத்துவரியை பாதியாக குறைக்க வேண்டும்…!!” தமிழக அரசுக்கு வேல்முருகன் வேண்டுகோள்…!!

சொத்து வரி உயர்வை குறைக்க வலியுறுத்தி பண்ருட்டி வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி களின் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதற்கு காரணம் ஒன்றிய அரசு தான் என தமிழக அரசு கூறியுள்ளது. அதன்படி உள்ளாட்சி அமைப்புகளில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட வேண்டுமெனில் இந்த சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்பட வேண்டும் என ஒன்றிய அரசு கூறியுள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது.

தமிழ்நாட்டு நகராட்சிகளின் சட்டம் பிரிவு 78 ன் படி அனைத்து வழிகளையும் தீர்மானிக்கும் உரிமை அந்தந்த மன்றத்திற்கு மட்டுமே உள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசு இந்த வரி உயர்வை அமல்படுத்தியுள்ளது அதன் அதிகாரத்திற்கு மீறிய செயலாகும். எனவே இந்த வரி உயர்வு கண்டனத்திற்குரியதாகும். இதனால் சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இந்த வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என அவர் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |