Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிதிக்குழு மானியம் சார்பில்…. 50 லட்சத்தில் தண்ணீர் தொட்டி…. சிறப்பாக நடந்த பூமி பூஜை….!!

நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் 50 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள தண்ணீர் தொட்டிக்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி 1-வது வார்டில் 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் சார்பில் 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டும் பணி தொடங்கியுள்ளது. இந்த தொட்டி கட்டுவதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்க்கான பூமி பூஜை நேற்று நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

அப்போது நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், பொறியாளர் பன்னீர் செல்வம், தி.மு.க கம்பம் நகர பொறுப்பாளர் வக்கீல் துரை நெப்போலியன், தெற்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் வீரபாண்டி, கவுன்சிலர்கள் சுந்தரி, இளம்பரிதி, குருகுமரன், வீரபாண்டியன், சர்புதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் அதிகாரிகள் அப்பகுதியில் அடிப்படை தேவைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர்.

Categories

Tech |