Categories
தேசிய செய்திகள்

சாக்கடைக்குள் தங்கம் இருக்கு…. பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இருவர்…. நொடியில் பறிபோன உயிர்….!!!!

தங்கம் கிடைப்பதாக பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இருவர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் ஏராளமான சிறிய தங்க நகைகள் செய்யும் பட்டறைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து கழிவான தங்கத் துகள்கள் சாக்கடையில் கலந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் சங்கம் கிடைக்கும் என்ற ஆசையில் பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இருவர் மூச்சு திணறி உயிரிழந்தனர். 10 அடி ஆழம் வரை இறங்கி தங்க கழிவுகளை தேடிக்கொண்டிருந்த இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |