வங்கியில் அடகு வைத்த நகையை மீட்கமுடியாமல் தவித்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையம் பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவருக்கு அங்கம்மாள்(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் ராஜேந்திரன் இருசக்கர வாகன பழுது நீக்கும் பட்டைரை நடத்தி அதில் வரும் வருமானத்தை வட்டிக்கு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கம்மாள் ரெட்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது 15பவுன் நகையை அடகு வைத்திருந்தார்.
இதனை திருப்புவதற்காக வட்டிக்கு கடன் கொடுத்திருந்த நபர்களிடம் பணத்தை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடன் வாங்கியவர்கள் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் நகையை திருப்ப முடியாமல் ஏலத்தில் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் இருந்த அங்கம்மாள் திடீரென வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் அங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.