Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…. அரசாணை வெளியீடு…!!!!!

அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்  அரசு பெண் ஊழியர்களுக்கு 21 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை அளிப்பதாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசின்  அனைத்து நலத்திட்டங்களும் மக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் பணியை தமிழக அரசு ஊழியர்கள் செய்து வருகிறார்கள். இதனால்தான் அரசும் அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து ஆலோசித்து செயல்படுத்துகிறது. மேலும் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்த கோரிக்கைகள் விரைந்து செயல்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா காலத்தில் அலுவலகத்திற்கு வந்த காரணத்தால் அவர்கள்  தொற்று  பாதிப்புக்குள்ளானார்கள். தொற்றால்  பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலும் தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டிருந்தது. மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெற்ற நாட்கள், தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் என அனைத்தும் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் சிறப்பு தற்செயல்  விடுமுறைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இதைத்தவிர கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்களும் தற்செயல் விடுப்பு  வழங்கப்பட்டது. இந்தநிலையில் தற்செயல் விடுப்பு பட்டியலில் அறுவை சிகிச்சையை சேர்க்கப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சை செய்த பெண் ஊழியர்களுக்கு 21 நாட்கள் தற்செயல் விடுமுறை அளிக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது. இதனால் தமிழக அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |