திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியானது உடற் பயிற்சி நிலைய உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் ஒரு தனியார் அரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 180 பேர் பங்கேற்று வயதின் அடிப்படையில் இந்தப் போட்டி நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் சிபின்ராய் வெற்றிபெற்று மிஸ்டர் திண்டுக்கல் ஆணழகன் 2022 என்ற பட்டத்தை வென்றார். இதையடுத்து சிபின்ராய்க்கு பொன்னாடை போர்த்தி போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர். இதில் மாவட்ட கால்பந்து கழக தொழிலாளர் சண்முகம் உள்பட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.