கல்லூரி மாணவியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உத்திரம்பட்டு கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நந்தினி அப்பகுதியில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் நிதிஷ் குமார் என்பவர் காதலிப்பதாக கூறி மாணவிக்கு தொந்தரவு அளித்துள்ளார்.
இதனையடுத்து காதலுக்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த நிதிஷ்குமார் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த நந்தினியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் நிதிஷ் குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.