கஞ்சா செடி வளர்த்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாரியப்பன் என்பவர் அது வாழைத்தோப்பில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த தோட்டத்து உரிமையாளருக்கு தெரியாமல் கருப்பையா அங்கு கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது கருப்பையா 160 சென்டிமீட்டர் அளவில் கஞ்சா செடியை வளர்த்து வந்தது உறுதியானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கருப்பையாவை கைது செய்ததோடு, கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.