Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரை தேடி அலையும் மயில்கள்…. பொதுமக்களின் செயல்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

மயில்கள் இரை தேடி சாலையில் சுற்றி திரிகிறது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில் ஏராளமான மயில்கள் காணப்படுகிறது. இந்த மயில்கள் உணவு தேடி சாலைகளில் சுற்றித் திரிகிறது. இந்நிலையில் பொதுமக்கள் மாலை நேரங்களில் தானியங்கள் உள்ளிட்டவைகளை மயில்களுக்கு இரையாக போடுகின்றனர்.

நேற்று மாலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரை தேடி வந்த மயில்கள் தானியங்களை உண்ணுகின்றன. அதன்பின் மயில்கள் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தாகத்தை தீர்த்துக் கொண்டன. இதனையடுத்து தொட்டியை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |