சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க உள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் பேரவையில் பேசியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது கிராமப்புற பகுதிகளில் சாலை மேம்பாட்டு, பனைமர பரப்பை அதிகரித்தல், குடிநீர் வசதியை மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் அறிவித்தார்.
சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என்றும், ஊரக பகுதிகளில் 15 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு 225 கோடி சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.