Categories
தேனி மாவட்ட செய்திகள்

சந்தேகத்தால் நேர்ந்த விபரீதம்…. மனைவி மீது தாக்குதல்…. விவசாயி அதிரடி கைது….!!

சந்தேகப்பட்டு மனைவியை பாட்டிலால் தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள வேல்நகரில் வசித்து வரும் தங்கபாண்டி(36) என்பவருக்கு லதா(33) என்ற மனைவி உள்ளார். விவசாயியான இவர் தனது மனைவியை அடிக்கடி சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தங்கபாண்டி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அவர் வீட்டு வாசலில் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது.

இதனை பார்த்து ஆத்திரமடைந்த தங்கபாண்டி அஜித்குமாரின் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடி சென்று தீயை அணைத்துள்ளனர். மேலும் வெளியே நின்று கொண்டிருந்த லதாவின் தலையில் பாட்டிலை கொண்டு தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து ஜெயமங்கலம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தங்கபாண்டியை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |