Categories
கிரிக்கெட் விளையாட்டு

’இதோ வந்துட்டோம்ல’… நியூசிலாந்துக்கு சென்றடைந்த கோலியின் படை

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக கோலி தலைமையிலான இந்திய அணி ஆக்லாந்து சென்றடைந்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பின், கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 24ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி ஆக்லாந்து சென்றடைந்ததை அணியின் கேப்டன் கோலி, புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் அவருடன் சக வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர் ஆகியோர் உடனிருந்தனர்.

டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காயம் காரணமாக தொடக்க வீரர் ஷிகர் தவான் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை இரண்டு முறை (2009, 2019) நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை இழந்த இந்தியா இந்த முறை கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா – நியூசிலாந்து டி20 போட்டி அட்டவனை

போட்டி இடம் நாள்
முதல் போட்டி ஆக்லாந்து ஜனவரி 24
இரண்டாம் போட்டி ஆக்லாந்து ஜனவரி 26
மூன்றாம் போட்டி ஹாமில்டன் ஜனவரி 29
நான்காம் போட்டி வெலிங்டன் ஜனவரி 31
ஐந்தாம் போட்டி மவுண்ட் மௌங்கனுய் பிப்ரவரி 2

 

Categories

Tech |