மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது வருகின்றது. நாடு முழுவதும் தொற்று பரவ காரணமாக கடந்த 2020இல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2021 இல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மத்திய உள்துறை கட்டுப்பாட்டிலுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கும் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 34 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.