Categories
சினிமா தமிழ் சினிமா

பீஸ்ட் படத்தின் அடுத்த பாடல்…. நாளை வெளியீடு…. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இந்தத் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட அந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே பீஸ்ட் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது மூன்றாவது பாடலான “பீஸ்ட் மோட்” நாளை வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அடுத்த சம்பவம் லோடிங்” என குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளது. திரை தீப்பிடிக்கும் என்ற பாடல் டிரைலரில் இடம் பெற்றுள்ள நிலையில் இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

Categories

Tech |