Categories
அரசியல்

மாணவர்களுக்கு எக்ஸாம் மன அழுத்தம்…. பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?… இதோ சில டிப்ஸ்…..!!!!!

கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அத்துடன் தேர்வுகளுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றனர். இதனிடையில் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவும் அந்த தேர்விற்கான முடிவுகள் வெளிவரும்போதும் மாணவர்கள் பதற்றமடைவது இயற்கைதான். கிட்டத்தட்ட மாணவர்கள் ஒவ்வொருவரும் இந்த சுமையை உணர்கிறார்கள். இதையடுத்து தேர்வுகள் முடிந்தவுடன், மாணவர்களும் பெற்றோர்களும் ரிசல்ட் குறித்து கவலைப்பட தொடங்குகிறார்கள். இதற்கிடையில் குழந்தைகளுக்கு தேர்வு அச்சத்தின் காரணமாக மனஅழுத்தம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது மற்றும் அதை அவர்கள் நிர்வகிக்க எவ்வாறு உதவலாம் என்பதை அறிந்து கொள்வது பெற்றோர்களின் கடமை ஆகும்.

பின் தேர்வுமுடிவுகள் என்ற ஒன்று மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பல்வேறு சமயங்களில் அதிக மனஅழுத்தத்தினை ஏற்படுத்தும். அதாவது மனஅழுத்தத்தினை  அதிகரிக்கும் ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி என்று கூறலாம். தேர்வு மற்றும் ரிசல்ட்பீதி ஏற்படுத்தும் தேவையற்ற மனஅழுத்தம் குழந்தைகள் தங்களது குழந்தை பருவத்தை இழக்க செய்கிறது. ஏராளமான குழந்தைகளின் குழந்தை பருவம் புத்தகங்களால் நசுக்கப்படுகிறது. இப்போதைய நாட்களில் பள்ளி குழந்தைகளிடம் காணப்படும் பொதுவான பிரச்சனைகளில் கல்வி மனஅழுத்தம் ஒன்று ஆகும். மோசமான மதிப்பெண் பெற்றால் அவமானம் என்பது மாணவர்களின் மனதில் பதிந்து விடுகிறது.

மாணவர்களின் மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி..?

# மாணவர்களுக்கு எக்ஸாம் இருக்கும் நேரத்தில் மனஅழுத்தத்திற்கு ஆளாவதற்கான காரணங்களைபெற்றோர்கள் கண்டறியவும். இந்த மனஅழுத்தம், உறக்கம், பசியின்மை, சமூகவாழ்க்கை ஆகிய அவர்களுடைய இயல்பு  நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்துகிறதா என்பதனை கவனிக்க வேண்டும்.

# தேர்வு நேரங்களின் போது மாணவர்கள் தங்களது எண்ணங்களை, உணர்வுகளை பகிர்ந்து செய்கிறார்களா என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். தெளிவாக புரியும் அடிப்படையில் எதிர்கொள்ளும் சிக்கல்களை கூறினால் உதவ தயாராக இருப்பதை பிள்ளைகளிடம் பெற்றோர்கள் வெளிப்படுத்த வேண்டும்.

# தேர்வு நேரங்களின் போது அதில் மட்டுமே கவனம் செலுத்தாமல் இசை கேட்பது, நடனம் ஆடுதல், ஓவியம் வரைதல், அடிப்படை உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் சிறிதுநேரம் நேரத்தை செலவழிக்க வைக்கலாம். இதன் காரணமாக மனம் அமைதியாக இருக்கும்.
# தேர்வுகள் (அல்லது) முடிவுகள் குறித்த மன அழுத்தம் உங்களது குழந்தைகளை மிகவும்  தொல்லை செய்வது போன்று பெற்றோர்கள் உணர்ந்தால், சற்றும் யோசிக்காமல் உடனே ஒரு மனநல நிபுணரைத் தொடர்புக்கொள்ளலாம்.

# முக்கியமான ஒன்று என்னவென்றால் குழந்தை மீதான எதிர்பார்ப்புகளை குறைத்து, அவர்களின் மதிப்பெண்கள் முக்கியமில்லை என்பதனை அவர்களுக்கு பெற்றோர்கள் புரியவைக்க வேண்டும்.

Categories

Tech |