அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக எவ்வாறு போராட்டங்கள் நடத்துவது மற்றும் மக்கள் நலத் திட்ட உதவிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதோடு அதிமுகவில் சசிகலாவை இணைப்பது தொடர்பாக தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூறியது குறித்த பேச்சுகள் எழுந்தது.
அப்போது ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் சிலர் அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு எடப்பாடிபழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரையும் சிலர் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். இந்த சூழ்நிலையில் துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஆர்.வைத்தியலிங்கம் கூட்டத்திலிருந்து கோபமடைந்து பாதியிலேயே வெளியேறினார்.