சென்னை ராயபுரம் தொகுதி 51-வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் கடந்த 30ஆம் தேதி அன்று மது அருந்திவிட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர் அவரை கண்டித்து வீட்டிற்க்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீசன் “நாங்கள் ஆளும் கட்சியினர் அவ்வாறு தான் செய்வோம். எங்களை எதிர்த்தால் உன்னை தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவோம்.!” என கூறியுள்ளார். இதனை அடுத்து அந்தக் காவலர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஜெகதீசன் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் ஜெகதீசன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஜெகதீசன் முன்ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஜெகதீசனின் முன்ஜாமீன் மனு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி பொறுப்பிலிருக்கும் காவலரை இவ்வாறு அவமரியாதை செய்பவர்கள் நாட்டை எவ்வாறு காப்பார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு இவருக்கு இப்போது முன் ஜாமீன் வழங்கினால் அது இவர் போன்ற பலரை இதுபோன்ற தவறு செய்ய வழிவகுக்கும். எனவே இவருடைய முன் ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Categories
போலீசை மிரட்டிய திமுக கவுன்சிலரின் கணவர்….!! நீதிமன்றம் காட்டிய அதிரடி…!!
