Categories
மாநில செய்திகள்

“ஆராய்ச்சி பணிகளுக்கான தேர்வு நகரங்கள்”…. 2-வது இடத்தை பிடித்த சென்னை…. வெளியான தகவல்…..!!!!!

லண்டன் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு மாதம் இரண்டு முறை எப்.டி.ஐ., இன்டலிஜென்ஸ் இதழ் வெளி வருகிறது. இந்த இதழில் உலகளவில் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் தரவரிசையை அன்னிய நேரடி முதலீட்டின் அடிப்படையில் முதல் 100 நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது. இது குறைவான செலவில் தரமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கான தேர்வாகவும் அமைந்து விட்டது. இந்த ஆய்வில் உலகளவில் அதிகளவு தேர்வு செய்யும் நகர்களின் பட்டியலில் தென்கொரியா தலைநகர் சியோல் முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து 2-வது இடத்தை இந்தியாவில் சென்னை பிடித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் நமது நாட்டின் கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு, மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மற்றும் ஹரியானா மாநிலத்தின் குர்கான் போன்ற நகரங்களும் அடுத்த 10  இடங்களுக்குள் இருக்கின்றன. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் அன்னிய முதலீட்டின்படி சென்னை நகரம் மட்டுமே வருடத்துக்கு மிகக்குறைந்த செயல்பாட்டு செலவை ஏற்படுத்துகிறது.
சென்னையிலுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தி ல்பணியாற்றும் நபர்களில் 50 பேருக்கு வருடத்துக்கு 9.54 கோடி ரூபாய் மட்டுமே செயல்பாட்டு செலவாகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மலேஷியா நாட்டின் பினாங் நகரில் வருடத்துக்கு 10 கோடி ரூபாய், குர்கான் மற்றும் புனேவில் 11.60 கோடி ரூபாய் வருடத்துக்கு செயல்பாட்டு செலவாக இருக்கிறது. இதற்கிடையில் இதரநாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் எலட்க்ரானிக்ஸ் குறித்த பொருட்கள் தயாரிப்பிற்கு குறைவான செலவு ஏற்படுகிறது. செமி கண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிப்பு துறையில் ஆராய்ச்சி மற்றும் புதுமையை கண்டுபிடிப்பதே நாட்டிற்கு முக்கியம் என்று பிரதமர் மோடி ஊக்கப்படுத்தியுள்ளார் என அந்த மாத இதழ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |