மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கான கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மூன்று தவணையாக விவசாயிகளுக்கு 6000 ரூபாய் பணம் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் 20 ஹேக்டேருக்கு மேல் நிலம் வைத்திருத்தல் அவசியம்.
இதுவரை இந்த திட்டத்தின் மூலம் 10 தவணைகள் வரை விவசாயிகளுக்கு பணம் அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் இதில் பயன்பெறும் விவசாயிகள் தங்களுடைய கேஒய்சி செயல்முறைகளை செய்ய வேண்டியதும் அதனை புதுப்பிக்க வேண்டியதும் அவசியம். தற்போது இ- கேஒய்சி செயல்முறைகளை முடிக்க மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான கால அவகாசத்தை மே 22ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.