Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இது பல நாளா நடக்கு ” உதவி மேலாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

மருத்துவமனையில் பொருட்களை திருடிய பணியாளர் மீது காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் தனியார் மருத்துவமனை உதவி மேலாளர் சத்தியபிரகாஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மருத்துவமனை மயில்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில்  நெல்லை மாவட்டம் சேர்ந்த எட்வின்ராஜா என்பவர் எங்கள் மருத்துவமனையில் லேப்  டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த சில நாட்களாக மருத்துவமனை  நிர்வாகத்திற்கு தெரியாமல் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஸ்டென்ட் உள்ளிட்ட 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடி வெளியே விற்பனை செய்துள்ளார். எனவே எட்வின்ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியுள்ளார். இந்த  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர  மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |