Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்… “50 அரை சதம்” எடுத்த இந்திய வீரர்களின் லிஸ்ட்….!!

டி20 கிரிக்கெட்டில் 50 அரைசதங்கள் எடுத்த முதல் 5 இந்திய வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் சர்வதேச டி20 போட்டிகள், ஐபிஎல் என இதுவரை 175 டி20 போட்டிகளில் விளையாடி 50 அரை சதங்களை கடந்துள்ளார். இவருடைய 50 ஆவது அரைசதத்தை 162 ஆவது இன்னிங்சில் கடந்து மேல் குறிப்பிட்டுள்ள பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதனையடுத்து 2 ஆவதாக பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான விராட் கோலி தனது 50 ஆவது அரைசதத்தை 192 ஆவது இன்னிங்சில் கடந்து இந்த பட்டியலில் 2 ஆவது இடத்தில் உள்ளார்.

இவர் தற்போது வரை 306 டி20 போட்டிகளில் விளையாடி 72 அரை சதங்களை கடந்துள்ளார். இந்த பட்டியலில் 3 ஆவது இடத்தில் 224 ஆவது இன்னிங்ஸில் தனது 50-வது சதத்தை கடந்து கௌதம் கம்பீர் உள்ளார். இதில் 232 ஆவது இன்னிங்சில் தனது 50 ஆவது அரை சதத்தை கடந்து 4 ஆவது இடத்தில் ஷிகர் தவான் உள்ளார். இந்த பட்டியலில் ரோஹித் சர்மா தனது 50 ஆவது அரை சதத்தை 245 ஆவது இன்னிங்சில் கடந்து 5 ஆவது இடத்தில் உள்ளார்.

Categories

Tech |