Categories
உலகசெய்திகள்

“இதிலிருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும்”… ஐக்கிய நாடு சபையில் இன்று வாக்கெடுப்பு….!!!!!

ரஷ்யாவை மனித உரிமை குழுவிலிருந்து நீக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

உக்ரைன்  நகரான புச்சாவில்  ஏராளமான அப்பாவி மக்களை ரஷ்ய படையினர் கொன்று குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரஷ்யாவை  மனித உரிமை குழுவில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என மேற்கத்திய நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாற்பத்தி ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்குவது தொடர்பாக ஐநா பொதுச்சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இந்த வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவுடன் நட்புறவு கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் தவிர்க்கும் எனக் கூறப்படுகிறது. மனித உரிமை கவுன்சிலில் இருந்து நீக்கினால் அமைதிப் பேச்சு வார்த்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நியூயார்க்கில் உள்ள ரஷ்யாவில் ரஷ்யாவுக்கான தூதர்  வசிலி நெபசன்யா  கூறியிருக்கிறார். இதற்கிடையில் ரஷ்யாவிற்கு எதிரான ஐநா சபை கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸகி  கூறியுள்ளார்.

Categories

Tech |