போர் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறுவதற்காக முயற்சி செய்து வரும் உக்ரைன் அகதிகள் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே உக்ரைனில் இருந்து வெளியேறும் ஒரு லட்சம் அகதிகளுக்கு அமெரிக்காவில் இடம் கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ள நிலையில் அமெரிக்காவையும் மெக்சிகோவையும் இணைக்கும் டிஜூவானா நகரத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட சுமார் 700 உக்ரைன் மக்கள் அமெரிக்க குடியுரிமைக்காக காத்து கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.