Categories
தேசிய செய்திகள்

திருவிழாவின் போது சோகம்….. பஸ்ஸில் அமர்ந்தவாறே 3 பயணிகள் பலி….!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் குடா என்ற கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்ள பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பயணிகள் அமரக்கூடிய இருக்கை நிரம்பியதால் பலர் பேருந்தின் மீது அமர்ந்து பயணம் செய்தனர். அந்த பஸ் ஜெய்சல்மீர் சேலக் சாலையில் சென்று கொண்டிருந்த போது மேலே தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் மேற்கூரை மீது பயணம் செய்த இரண்டு சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |