Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு…. அகவிலைப்படி உயர்வு….வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

கர்நாடக மாநில அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட சில சூப்பர் அறிவிப்புகளானது சமீப காலமாக வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் அகவிலைப்படி தொகையை தங்களது ஊழியர்களுக்கு அளிப்பதாக அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கர்நாடக மாநில அரசும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், 7-வது ஊதியக் குழுவின் கீழ், ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியுள்ளதாக நேற்று  (ஏப்ரல் 5) சூப்பர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதன்படி கர்நாடக மாநில அரசும், தற்போது 24.50 சதவீத DA, 27.25 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில், கடந்த  2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களில், மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி (DA) விகிதங்களை, 1 ஜனவரி 2022 முதல் தற்போதுள்ள அடிப்படை ஊதியத்தின் 24.50% லிருந்து 27.25% ஆக நடைமுறைப்படுத்துகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு கூடுதலாக 9,544.50 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள 34% அகவிலைப்படி உயர்வால் ஊதியத்தில் ரூ.540 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மத்திய அரசை தொடர்ந்து கர்நாடக மாநில அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த உள்ளது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |