கொலை செய்யப்பட்டதற்காக சங்கராபுரம் சாலையில் மறியல் செய்த 86 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதுடைய விவசாயி அரசு. முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த வெங்கடேசன் குடும்பத்தார்கள் இவரை கடுமையாக தாக்கி உள்ளதாக கூறப்படுகின்றது. இதில் அரசு படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அரசுவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து அரசின் கொலை சம்பந்தப்பட்டவர்கள் குறித்து நடவடிக்கை கோரியும் அவரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள். மேலும் இந்த மறியலால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதால் அரசுவின் மனைவி உட்பட 86 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.