கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தொற்று பரவல் கணிசமான அளவில் குறைந்ததை அடுத்து இந்த வருடம் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 14ஆம் தேதி திருக்கல்யாணமும், 15-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.
இதனை அடுத்து 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா நடைபெற இருக்கிறது. தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறவிருக்கிறது. பக்தர்களின் வசதிக்காக 200 ரூபாய் தொடங்கி 500 ரூபாய் வரை கட்டணம் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த திருவிழாவிற்கு 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.