Categories
அரசியல்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடக அரசு, அம்மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்துள்ளது.  அதன்படி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 24.50 விழுக்காட்டில் இருந்து 27.25 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி விகிதம்  24.50 விழுக்காட்டில் இருந்து 27.25 விழுக்காடாக உயர்த்தப்படுகிறது. இது ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக கடந்த 30ம் தேதி மத்திய அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கர்நாடக மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி உள்ளது.  இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |