சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாகச் செல்லும் கோவை-பெங்களூர் சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கக்கோரி யானைகள் நல ஆர்வலர் எஸ்.பி சொக்கலிங்கம் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்திருந்தார்.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு இந்த போக்குவரத்து தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களும், 16.2 டன்னுக்கும் மேல் எடையுள்ள வாகனங்கள் எப்போதும் அனுமதி இல்லை எனவும், அதற்கு கீழ் உள்ள வாகனங்கள் மாலை 6 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் அனுமதிக்கப்படும். அந்த சாலையில் அனுமதிக்கப்படும் வாகனங்கள் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு செல்லக்கூடாது என தீர்ப்பளித்தனர்.