Categories
சினிமா தமிழ் சினிமா

“நாக சைதன்யாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து”….. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சமந்தா….!!!!

நடிகை சமந்தா தனது முன்னாள் கணவரான நாகசைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இவர் நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென்று கணவனை பிரிவதாக அறிவித்தார்.

அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் என்ற படத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் சமந்தாவும், நாகசைதன்யாவும் மீண்டும் இணைந்து படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் விவாகரத்துக்கு பின்னர் நடிகை சமந்தா அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் நாக சைதன்யாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 2019ஆம் ஆண்டு நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் நடித்து வெளியான மஜிலி என்ற படத்தின் மூன்று ஆண்டு நிறைவு செய்ததை வெளிப்படுத்தும் விதமாக இந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.

Categories

Tech |