பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனக்கு மிரட்டல் கடிதம் வந்ததாக கூறி காட்டிய கடிதம் அவரது வெளியுறவுத் துறை அமைச்சக ஊழியர்களால் தயாரிக்கப்பட்டது என எதிர்க்கட்சி தலைவர் மரியம் நவாஸ் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சதி இருப்பதாக இம்ரான் கான் கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக அவர் ஒரு கடிதத்தையும் காண்பித்துள்ளார். ஆனால் அந்தக் கடிதம் குறித்து எந்த விபரங்களையும் அவர் வெளியிடவில்லை என கூறியுள்ளார்.
ஏனென்றால் அப்படி ஒரு கடிதமே வரவில்லை என்றும் அது வெளியுறவு அமைச்சக ஊழியர்கள் ஆல் உருவாக்கப்பட்ட ஒரு போலியான கடிதம் எனவும் கூறியுள்ளார். அதோடு அவர் இந்த கடிதத்தை காண்பிப்பதற்கு முன்பாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ப்ராசலஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் அவரை உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.