தம்பி இறந்த துக்கத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் தோகைமலை பாறைபட்டியை சேர்ந்தவர்கள் முத்துகிருஷ்ணன் பானுப்பிரியா தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கூலித்தொழில் செய்து சாதாரண வாழ்கை வாழ்ந்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முத்து கிருஷ்ணனின் தம்பி கருப்பையா மரணமடைந்தார். இந்த மன வருத்தத்தில் இருந்த முத்துகிருஷ்ணன் திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
இதில் பாதி உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.